ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.