சக்ராசனத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் உலக சாதனை படைத்துள்ளார்.
திருவள்ளூர் அருகே சக்கராசனத்தை பின்னோக்கி வளைந்து 29 முறை வாயால் பேப்பர் கப்புகளை கவ்வியபடி முன்பக்கம் வீசி பள்ளி மாணவன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கும்முடிபூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த யஸ்வந்த் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றார்.
இந்நிலையில் அங்கு இயங்கி வரும் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயிற்சி பெற்ற வருகிறார். இதையடுத்து இவர் சக்கராசனத்தில் பின்னோக்கி வளைந்து 29 முறை வாயால் பேப்பர் கப்புகளை கவ்வியபடி முன்பக்கம் விசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு, வேல்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் உலக சாதனை ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.