திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கிழக்கு மிதினப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீடு உள்ளது. இந்த வீட்டில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்குவங்க முதலமைச்சரின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாருமான அபிஷேக் பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற இருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.