தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட இருக்கின்றது.
முதன்மை தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக நேரடி பயிற்சி வகுப்புகள் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் விண்ணப்பித்திருக்கும் நகலுடன் ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் வேலை வாய்ப்பு மையத்தை அணுகி பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.