Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதிங்க… போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி புது ரோட்டில் இருக்கும் நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பாக நேற்று முன்தினம் காலையில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பேருந்துகள் பள்ளிவாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆட்சியர் மகாலட்சுமி, போலீசார் ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் பள்ளி முன்பு மினி பேருந்துகளை நிறுத்துவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |