தஞ்சை ரயில் நிலையத்திற்கு 162-வது வயது ஆரம்பித்ததால் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தஞ்சை ரயில் நிலையத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும் 7 ரயில்வே பாதைகளும் இருக்கின்றது. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் ரயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் தஞ்சை ரயில் நிலையம் முதன்மையாக திகழ்கிறது. பல சிறப்புக்குரிய இந்த தஞ்சை ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 161 வருடம் நிறைவு பெற்று 162 வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நேற்று முன்தினம் காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கம் சார்பாக பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ,வக்கீல்கள், பேராசிரியர்கள் என பலர் பங்கேற்றார்கள்.