பள்ளி கட்டிடங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்க துணைத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.திலகவதி வரவேற்க அலுவலக கணக்காளர் சிவா தீர்மானங்களை படிக்கும்போது பாமக உறுப்பினர், துணைத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார்கள். இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தில் இருக்கும் 76 பாழடைந்த பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய கட்டிடங்களை இடித்திட வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.