பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் செய்யப்பட்டவர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்கள். தற்போது இருக்கும் மீதி நாட்களில் யார் சிறப்பாக விளையாடி பைனல் வரை செல்கின்றார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றார்கள்.
இதுவரை ஆறு போட்டியாளர்கள் எழுமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மைனா, ஜனனி, ரச்சிதா, குயின்சி, தனலட்சுமி, கதிரவன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள். இதில் குயின்சிதான் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை எபிசோடு படபிடிப்பு இன்றோடு முடிவடைந்த நிலையில் குயின்சி எலிமினேஷன் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.