Categories
சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கும் சுதா கொங்கரா.? வைரலான செய்தி… விளக்கமளித்து பதிவு..!!!!

தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பது குறித்து பரவிய செய்திக்கு சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார்.

துரோகி திரைப்படத்தின் மூலம் சினிமாவுலகிற்கு அறிமுகமானவர் சுதா கொங்காரா. இதன்பின் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது.

இந்த நிலையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் இயக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. தற்போது இது குறித்து சுதா கொங்கரா தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் திரு.ரத்தன் டாட்டாவின் மிகப்பெரிய ரசிகர். ஆனால் அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் எண்ணம் தற்போதைக்கு எனக்கு இல்லை. ஆனால் எனது அடுத்த திரைப்படத்தின் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு நன்றி! விரைவில்.! என பதிவிட்டிருக்கின்றார்.

Categories

Tech |