கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 2021-22 வருடம் அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூபாய்.195 வீதம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 2021-22 ஆம் வருடம் அறுவைக்கு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதில் கரும்பு விநியோகம் செய்த 512 விவசாயிகளுக்கு ரூபாய் 54,38,320 வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர், வேளாண்மை இணை இயக்குனர், வங்கி மேலாளர் என பலர் பங்கேற்றனர்.