செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கின்றது. ட்ரைலரில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழில் ஈடுபடுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பது குறித்து பற்றி இந்த ட்ரெய்லர் உருவாகி இருக்கின்றது. இது தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.