Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது… கார்-லாரி நேருக்கு நேர் மோதி… திருப்பூரில் நடந்த துயரச் சம்பவம்..!!!!

கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் காட்டுப்புத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் உறவினர் வீட்டு திருமணம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் தனது உறவினர் மணி, உமாவதி, ரமணன் உள்ளிட்டோரை தனது காரில் அழைத்துக் கொண்டு நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். கார் காங்கயம்-சென்னிமலை சாலை அருகே சென்ற போது காலை திடீரென 6 மணி அளவில் எதிரே வந்த லாரி எதிர்ப்பார விதமாக மோதியது.

இதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விசுவநாதன் மற்றும் மணி பரிதாபமாக உயிரிழந்தார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமணன் மற்றும் உமாவதி உள்ளிட்டோரை அங்கிருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே ரமணன் உயிரிழந்தார். தற்போது உமாவதி கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |