நிலுவையில் இருந்த 50 மனுக்களுக்கு வீரபாண்டி காவல் நிலையத்தில் தீர்வு காணப்பட்டது.
தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமை தாங்க வீரபாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 60 மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.
இதில் மனுதாரர்கள் மற்றும் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் என இரு தரப்பினர் இடையே விசாரணை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் பத்து மனுக்களுக்கு நேரடியாக சென்று தீர்வு வழங்கப்பட இருக்கின்றது. இதில் வீரபாண்டி சப் இன்ஸ்பெக்டர் உட்பட பல பங்கேற்றனர்.