வனத்தொழில் பழகுனர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து 2486 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எந்த வித மின்சாதனங்களையும் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.
இத்தேர்வினை 2486 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 407 பேர் மட்டுமே எழுதினார்கள். இத்தேர்வினை 16.37 சதவீத பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மீதம் இருக்கும் 83.71% பேர் தேர்வுக்கு வரவில்லை. அதாவது 2081 பேர் தேர்வு எழுதவில்லை.