நாமக்கலில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளராக பணியாற்றுவதற்காக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சென்னை மனிதவளத்துறை அதிகாரிகள் தலைமை தாங்க மாவட்டத்திலிருந்து 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். இதில் அவர்களுக்கு பலவகையான தேர்வுகள் நடத்தப்பட்டது.
பின்னர் இறுதியாக 16 டிரைவர்கள், 7 மருத்துவ உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணியில் அமர்க்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட செயலாளர் வாகன பராமரிப்பு மேலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.