Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு… 2 ஆண்டுக்கு பிறகு… கணவர் கைது… கூடலூர் அருகே பரபரப்பு…!!!

குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இரண்டு வருடங்களுக்கு பிறகு போலீசார் கணவரை கைது செய்துள்ளார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த பர்ஷானாவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சமதுவுக்கும் சென்ற 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பர்ஷானா 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது எனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கணவன் அடித்து துன்புறுத்தி வந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அப்துல் சமதுவை சிறையில் அடைத்தார்கள். இளம் பெண் தற்கொலை செய்து கொண்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |