பிரபல நடிகை ஹரிப்பிரியாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
பிரபல முன்னணி நடிகையான ஹரிப்பிரியா 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தமிழில் கனகவேல் காக்க, முரண், வல்லக்கோட்டை திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் கடைசியாக மிருகமாய் மாற திரைப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடித்திருந்தார்.
இவரும் நடிகர் வசிஷ்ட சிம்ஹாவும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரின் குடும்பத்தாரும் காதலுக்கு ஒப்பு கொண்டதால் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்று உள்ளது. இன்னும் திருமண தேதி முடிவு செய்யவில்லை குறிப்பிடத்தக்கது.