தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் ஆரம்பமாக உள்ளது.
சென்னையில் இரண்டு வாரங்கள் படபிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளார்கள். இதன்பிறகு காஷ்மீரில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் படபிடிப்பை நடத்த உள்ளதாக சொல்லப்படுகின்றது. இத்திரைப்படம் மும்பை தாதாக்கள் பின்னணியில் முழு அதிரடி திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் லீக்காகி உள்ளது. ஹாலிவுட் திரைப்படமான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ளார். இந்த படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் வில்லன்களாக நடிக்க இருப்பதாகவும் ஹீரோயினாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக லோகேஷ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க போகின்றார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதை விஜய்சேதுபதி மறுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, விக்ரம் திரைப்படத்தில் நான் நடித்த சந்தானம் கேரக்டரை பொறுத்தவரை அந்த திரைப்படத்தோட அது முடிந்து விட்டது. மீண்டும் அந்த கேரக்டர் உயிர் பெற்று வருவதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் விக்ரம் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திலோ அல்லது தளபதியின் 67 திரைப்படத்திலோ சந்தானம் கேரக்டர் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதுவரை தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதற்கு லோகேஷ் கனகராஜ் என்னை அணுகவில்லை. ஆகையால் தளபதி 67 திரைப்படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.