Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்திலிருந்து வெளியான “தீ பாடல்”…. யூடியூபில் 1 கோடி பார்வையாளர்கள்… மாஸ் காட்டும் தளபதி…!!!

வாரிசு திரைப்படத்திலிருந்து வெளியான தீ பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

தளபதி நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் திரைப்படம் வாரிசு. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜு தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். முன்பே வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் சிம்பு பாடியுள்ள தீ தளபதி பாடல் ரிலீஸானது. இந்தப் பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்திருக்கின்றது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

Categories

Tech |