பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகப் பிரியா என்பவர் எம்பிஏ முடித்திருக்கின்றார். இவரும் ரவிச்சந்திரன் என்பவரும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றார்கள்.
அங்கு பெண்கள் பிரிவுக்காக நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் லோகபிரியா தங்கப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் கிராம மக்கள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பை அளித்தார்கள்.