லவ் திரைப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார் நடிகை வாணி போஜன்.
மிரள் திரைப்படத்தின் மூலம் இணைந்த பரத் மற்றும் வாணி போஜன் மீண்டும் லவ் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்தப் படம் பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் விவேக் பிரசன்னா, டேனியல் நடித்திருக்கின்றார்கள். திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளதை ஆர்பி பாலா இயக்கியிருக்கின்றார்.
அண்மையில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படவிழாவில் பேசிய வாணி போஜன் தெரிவித்துள்ளதாவது, லவ் ஒரு வித்தியாசமான திரைப்படம். நடிகையாக என்னை நிரூபிக்க ஒரு நல்ல திரைப்படம். மிரள் திரைப்படத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த படம் முழுக்கவே நிறைய சவால்கள் நிறைந்ததாக இருக்கின்றது. இந்த படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கி நடித்தேன்.
நானும் அடித்துள்ளேன். அந்த அளவிற்கு ரியலாக நடித்திருக்கின்றோம். இப்படம் உருவான சமயத்தில் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. இதை பார்த்துவிட்டு எனது வீட்டில் நீ படத்தில்தான் நடிக்கப் போகிறாயா இல்லை யாரிடமும் சண்டை போட போகிறாயா என கேட்டார்கள். அந்த அளவுக்கு இப்படத்திற்காக உழைத்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.