பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார்.
பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அதை எப்படி நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கின்றது. திருமணம் குறித்து வீட்டில் கேட்பார்கள். ஆனால் எனது திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு தெரியும். அதனால் அழுத்தம் தர மாட்டார்கள். முன்பு திருமணம் செய்தால் நடிகைகள் நடிக்க மாட்டார்கள்.
இப்போது அது மாறிவிட்டது. திருமணம் குறித்து இப்போது வரை நான் யோசிக்கவில்லை. நிச்சயம் திருமணம் செய்வேன். திருமணத்தை ரகசியமாக வைக்க மாட்டேன். எல்லோருக்கும் சொல்வேன். நான் இந்த இயக்குனருடன் படம் பண்ண வேண்டும். இந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என யோசிப்பது இல்லை. என்னை தேடி வரும் கதைகளில் நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிப்பது மட்டுமே எனது நோக்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.