Categories
சினிமா தமிழ் சினிமா

இப்பதான் முடிஞ்ச மாதிரி இருக்கு… அதுக்குள்ள மறுபடியுமா…? மீண்டும் விஜயின் வாரிசு-க்கு ஏற்பட்ட சிக்கல்..!!!

விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து நேரடி திரைப்படங்களுக்கு இணையாக வெளியிடுவது குறித்த சர்ச்சை சென்ற சில வாரங்களாகவே இருந்து வருகின்றது. தமிழ், தெலுங்கு திரைப்பட சங்கங்கள் இது பற்றி பேசி தீர்த்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் விசாகப்பட்டினம் திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்கம் மீண்டும் இதை கையில் எடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

இம்மாதிரியான பண்டிகை நாட்களில் தெலுங்கு திரைப்படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தியேட்டர்காரர்களை கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டு இருக்கின்றார்கள். வாரிசு திரைப்படத்தை தயாரிக்கும் தில் ராஜு தெலுங்கு சினிமா உலகில் மிகப்பெரிய விநியோகஸ்தகர், தியேட்டர் வட்டாரங்களில் அதிகம் நெருக்கமுடையவர். பல மாதங்களுக்கு முன்பாக வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்துவிட்டார். இதனால் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு முக்கிய திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கின்றது என கூறுகின்றார்கள். முடிந்து விட்டதாக கருதிய இந்த பிரச்சனை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

Categories

Tech |