சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, 2022 ஆம் வருடத்திற்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களுக்கு தலா ரூபாய் 20000, 10000, 5000 வீதம் வழங்கப்படுகின்றது.
இந்த விருது சாதி, இனம் வகுப்பை சேர்ந்தவர்கள் பிற ஜாதியின வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போது அல்லது தொடர் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரியும் போது அவரது உடல் மற்றும் மனவலிமை பாராட்டும் வண்ணம் இந்த விருது வழங்கப்படுகின்றது.
இதற்கு விண்ணப்பிக்க www.sdat.tn.gov.in மற்றும் http://awards.tn.gov.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகின்ற 14ஆம் தேதியே கடைசி ஆகும் என தெரிவித்துள்ளார்.