மேற்கு ஆரணி ஊராட்சி அலுவலகத்தில் டெண்டர் விவகாரத்தில் நடந்த பிரச்சனையில் நாற்காலி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நீதியின் மூலமாக 17 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு 83 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாளின் கணவர் சீனிவாசன் சொல்லும் நபருக்கு மட்டுமே பணிகளை செய்ய டெண்டர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதன் காரணமாக ஒன்றிய குழு தலைவர் கணவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய குழு துணைத் தலைவருக்கு ஆதரவாகவும் பாமக உறுப்பினர் ஏழுமலை, அலுவலகத்தில் குழுத்தலைவரின் கணவர் சீனிவாசன் அமர்வதற்காக இருந்த இருக்கையை அலுவலக வளாகத்தில் தூக்கி வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.