Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… குடியாத்தத்தில் 1கோடி வரி வசூல்‌…!!!

குடியாத்தம் நகராட்சியில் சென்ற 2 வாரத்தில் ஒரு கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வாடகை, வணிக தொழில் வரி, குடிநீர் கட்டணம் என சென்ற நவம்பர் மாத 15ஆம் தேதி வரை 10 கோடியே 18 லட்சம் வரி நிலுவையாக இருந்த நிலையில் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு செய்து தரப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டார்கள். சென்ற இரண்டு வாரங்களாக குழுக்கள் அமைத்து தீவிர வரி வசூலில் ஈடுபட்டதில் ரூபாய் 1 கோடி வசூலானதாக நகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து வரி வசூல் நடைபெறும் எனவும் அதிக வரி பாக்கி வைத்துள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |