தேனியில் மாணவருக்கே தெரியாமல் கல்வி கட்டணத்தை செலுத்தி விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு மாணவர் ஒருவர் பயின்று வருகின்றார். இவர் தந்தையை இழந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாணவனின் கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்த முடிவு செய்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று முதல்வரை சந்தித்தார்கள்.
அப்போது மாணவரின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்கள். அதில் மாணவர் பாக்கி வைத்திருந்த 8,750 கட்டணத்தை அவர்கள் செலுத்தினார்கள். இது குறித்து கல்வி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவரிடம் தெரிவித்தது. தனக்கே தெரியாமல் விஜய் ரசிகர்கள் தனக்கு கல்வி கட்டணத்தை செலுத்தியதை அறிந்து மாணவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இந்த செய்தியானது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.