Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்… வெளியான ஹிப்ஹாப் ஆதி பட அப்டேட்..!!!

அனிகா சுரேந்திரன் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

இசையமைப்பாளரான ஹிப்பாப் ஆதி மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார்.

இத்திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கின்றார். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். ஏற்கனவே மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் தற்போது தமிழில் ஹீரோயினாக களமிறங்க இருக்கின்றார்.

Categories

Tech |