மீண்டும் மகேஷ் பாபு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார்.
தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ் பாபு. இவரின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா அண்மையில் உயிரிழந்தார். இதற்கு முன்னதாக இவரின் அண்ணன் மற்றும் தாயார் உள்ளிட்டோர் உயிரிழந்தார்கள். இவரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்த நிலையில் மகேஷ் பாபு மிகவும் மனமுடைந்து போனார்.
இந்த நிலையில் இவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் அண்மையில் மும்பையில் நடந்த விருந்து ஒன்றில் படக்குழுவினருடன் பங்கேற்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை மகேஷ் பாபுவின் மனைவி வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மகேஷ் பாபு மீண்டும் இயல்பு நிலைக்கி திரும்பி உள்ளார் என கூறி வருகின்றார்கள்.