ஷாருக்கானின் மகன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
ஹிந்தி சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி இருப்பதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கதை எழுதி முடித்து விட்டேன்…. ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டிருக்கின்றார்.
இதற்கு ஷாருக்கான் யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துக்கள்.. அது எப்போதும் சிறப்பானது.. என தனது மகனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.