இன்றைய பிக்பாக்ஸிற்காண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இருப்பதிலேயே மிகவும் ஏமாற்ற அளித்த பர்பாமென்ஸ் யாருடையது என கதிரவன் கேட்க அதற்கு விக்ரமன் தான் என மணிகண்டன் கூறுகின்றார். மேலும் அவர் எனக்கு மட்டும் அந்த கதாபாத்திரத்தை கொடுத்திருந்தால் கோல்டு, சில்வர், பிரான்ஸ் என எல்லாத்தையும் எடுத்திருப்பேன் என கூறுகின்றார்.
இதைக் கேட்ட விக்ரமனுக்கு கோபம் வந்துவிட்டது. எனக்கு கொடுத்ததை அவருக்கு வந்திருந்தால் நான் பண்ணி இருப்பேன் என அனுமானத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது. நீங்க அதைப் பத்தி பேசுறீங்க, இந்த அவார்ட் பத்தி பேசுங்க என மணிகண்டன் கூறுகின்றார். என் அவார்டு பத்தி தாங்க நான் பேசுறேன் என பதில் அளிக்கின்றார் விக்ரமன்.
எனக்கு ஐடியாலாஜிக்கலி அந்த படம் உடன்பாடு இல்லை என்பது எனது கருத்து. அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என கத்துகின்றார் விக்ரமன். இதைப் பார்த்த பார்வையாளர்களோ விக்ரமன் மட்டும் அடுத்தவர்களின் பர்பாமன்ஸை குறை கூறலாம். ஆனால் மற்றவர்கள் அவரின் பர்பாமன்ஸ் குறித்து கருத்து தெரிவித்தால் ஏற்க மாட்டாரா? உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னியா விக்ரமன் என கேள்வி எழுப்புகின்றனர்.
https://twitter.com/Beyourself1204/status/1601062075882962944?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1601062075882962944%7Ctwgr%5E023d2a62e0c386edb7ed232449c162d849a27b8a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-22292962983884607999.ampproject.net%2F2211250451000%2Fframe.html