Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழக அரசு நடத்தும் கலைத் திருவிழா… பெண் கல்வி குறித்து முக்கியத்துவம்.. வில்லுப்பாட்டு பாடி மாணவர்கள் அசத்தல்..!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாணவர்கள் வில்லுப்பாட்டு பாடி அசத்தினார்கள்.

தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்காக தமிழக அரசு கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டது. அந்த வகையில் ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேற்று நடந்தது.

இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை கல்வி அலுவலர் பார்வையிட்டார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள். இதில் பெத்தநாயக்கனூர் அரசு உயர் பள்ளி மாணவர்கள் பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றி வில்லுப்பாட்டாக பாடி அசத்தினார்கள்.

Categories

Tech |