தங்கலான் படத்தின் புதிய போஸ்டர் வைரலாகி வருகின்றது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பா.ரஞ்சித் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து படகுழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்த போஸ்டரில் விக்ரமும் பா.ரஞ்சித்தும் இடம் பெற்றுள்ளன. இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.