பிக்பாஸ் வீட்டில் கதிரை காதலித்தது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு குயின்சி பதிலளித்துள்ளார்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கேற்றவர் குயின்சி. இவர், கதிர், சிவின் என மூவரின் காதல் கதை ஓடிக் கொண்டிருந்தது. கதிர் மீதான காதலை சிவின் மறைமுகமாக சொன்னார். ஆனால் கதிர் அதை புரியாதது போலவே மறுத்துவிட்டார். இதன்பின் கதிரும் குயின்சியும் நெருக்கமாக பழகி வந்தார்கள். இதனை பார்த்த பார்வையாளர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள் என நினைத்தார்கள்.
இந்த நிலையில் குயின்சி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இவர் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடிய போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் கதிரை உண்மையாக காதலித்தீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு குயின்சி கூறியுள்ளதாவது, சிவினை வெறுப்பேத்தவே நானும் கதிரும் பிராங்க் செய்தோம். உண்மையாக காதலிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.