வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பகுதியில் இருக்கும் ஜீவா நகரை சேர்ந்த நரேந்திரன் என்பவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை தனது தம்பி மற்றும் சித்தப்பா உள்ளிட்டோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டார்கள். நரேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த செந்தில்குமார் மற்றும் அமிர்தலிங்கம் அருகில் இருக்கும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் காரை ஓட்டி வந்த பரமேஸ்வரன், அவரின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.