தேனி அருகே கஞ்சா விற்பதற்காக பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பாண்டியன் நகரில் முற்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புதருக்குள் பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை மடக்கி பிடித்தார்கள்.
மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்ற 14,200 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தார்கள். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கோபிநாத், கோழிராஜா, மணிமுத்து உள்ளிட்டோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பாண்டி, சாந்தாமணி, செல்வம் உள்ளிட்டோரிடம் வாங்கியதாகவும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து பொட்டலம் போட்டதாகவும் அப்போது போலீசாரிடம் சிக்கியதாகவும் தெரிவித்தனர். போலீசார் பாண்டி, சாந்தாமணி, செல்வம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றார்கள்.