சித்த வைத்தியர் சிவராஜ் (78) உடல் நலக்குறைவு காரணமாக இன்று சேலத்தில் காலமானார்.
மிக பிரபலமான சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் இன்று சேலத்தில் காலமானார். சேலத்தை தலைமை இடமாக கொண்ட இந்தியாவில் ஏழு தலைமுறைகளாக 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவக்குமாரின் குடும்பம். குறிப்பாக ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி காண சித்த மருத்துவத்தில் பிரபலமானவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தவர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ், சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு 12 மணிக்கு உயிரிழந்தார். அவரின் உடல் சிவதா புரத்தில் உள்ள அவரின் பூர்வீக வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சுய இன்பம், வயது மூத்த பெண்களிடம் உறவு இன்னபிற சமாச்சாரங்களை பேசியதால் இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவர்.