திரையுலகில் 90களில் முன்னணி நடிகராக இருந்த அருண்பாண்டியன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் அருண் பாண்டியன். ஆனால் இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்தார். இப்போது அவர் மீண்டும் திரை உலகத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ள அன்பிற்கினியாள் என்ற படத்தில் அருண்பாண்டியன் நடித்துள்ளார்.
இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் பிரேக் எடுத்துக்கொண்ட அருண் பாண்டியனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிகர் அதர்வாவுக்கு தந்தையாக அருள் பாண்டியன் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.