பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ராங்க் (49) திடீரென மரணம் அடைந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஜேசன் 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட் கார்ட்டூன் ஆன பவர் ரேஞ்சர்ஸில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் மொத்தம் 127 எபிசோடுகளில் கிரீன் ரேஞ்சராக நடித்துள்ளார்.
இவர் பவர் ரேஞ்சர் கதாபாத்திரம் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் திரை உலக பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜேசன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.