Categories
தேசிய செய்திகள்

91 வயதிலும் முதியவரின் நல்லுள்ளம்…. வெளியான காணொளி… குவியும் பாராட்டு…!!

91 வயதிலும் முதுகு வலியைப் பொருட்படுத்தாமல் சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முதியவரின் செயல் பாராட்டுதலைப் பெற்று வருகிறது

சமூக வலைத்தளத்தில் ஏராளமான பாராட்டத்தக்க சம்பவங்கள் பகிர படுவதுண்டு. அது சில நேரம் நெகிழ்ச்சியூட்டும் விதமாகவும் அமையும். அவ்வகையில் டெல்லியில் உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நித்தின் சங்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு உங்களுக்கு 91 வயது, முதுகுவலியும் உங்களுக்கு இருக்கிறது, ஆனாலும் ஒவ்வொரு நாளும் குர்கானில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு அதிகாலை 4 மணிக்கு பிரதான சாலைக்கு வருகிறீர்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

அவர் வெளியிட்ட காணொளியில் 91 வயது முதியவர் சிறிய குவளையில் சாலையோரம் வைத்திருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை பதிவு செய்திருந்தார். அதன்பிறகு முதியவர் பாபாவை அறிமுகப்படுத்த அதிகாலை 4 மணிக்கு பாபா சாலைக்கு வருகிறார். பின்னர் சாலையின் இரண்டு புறங்களிலும் இருக்கும் தாவரங்களை தத்தெடுத்த பாபா தனக்கு இருக்கும் கடுமையான முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் தினமும் தண்ணீர் ஊற்றி வருகிறார் என்பதை காணொளியாக பதிவு செய்திருந்தார்.

Categories

Tech |