Categories
மாநில செய்திகள்

9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் ரத்து…. பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு முதல் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல 500 மதிப்பெண்களுக்கு கணக்கீடு செய்யப்படும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல.

அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்தது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் தொழிற்கல்வி பாடத்திற்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி அறிவிக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. இதுவரை பிளஸ்-2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் மற்ற பாடப் பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி பாடத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனால் 200க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலையிலிருந்து நீக்க படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |