கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஒத்த தெருவில் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் அருகிலேயே குளம் ஒன்று இருக்கின்ற நிலையில் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அங்கு மீன்களை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிள்ளையார் கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற தலைவர் சோழராஜன் அங்கு சென்று பார்வையிட்டார். இதன்பின் நகராட்சி பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இந்த குளத்தின் அருகே இருக்கும் மருத்துவமனையின் கழிவுநீர் குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து விடுகின்றது. இந்த கழிவு நீரால் தான் மீன்கள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூய்மையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.