நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 9-11 மாணவர்களுக்கு யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசு பொதுத் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என்று மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் 12 மாதங்களுக்கு மட்டுமே 3ஆம் தேதி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.
ஆனால் 11 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் அடுத்த வகுப்புகளிலோ அல்லது உயர் படிப்பிற்கோ சேர்ப்பது என்பது குறித்த குழப்பம் நிலவி வந்தது. கடந்த வருடம் இதே போன்ற சூழ்நிலை வரும்போது காலாண்டு, அரையாண்டு பருவ தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த வருடம் அந்த தேர்வும் நடத்தப்படவில்லை என்பதால் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.