Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

“9,10,11 மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – தமிழக அரசு கொடுத்த அலர்ட் …!!

தமிழகத்தில் 9,10 ,11 ஆகிய 3 நாட்களிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். அப்போது வரும் 9-ஆம் தேதி மற்றும் 10,11ம் தேதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதிக கனமழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை துறை தயார் நிலையில் இருக்கிறது என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சி தலைவர்களை உஷார் படுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் ஆங்காங்கே இருக்கின்ற தன்னார்வலர்களை உடனடியாக இந்த பணிகளை செய்வதற்கு கூறியுள்ளோம். காரணம் வருகின்ற 10-ஆம் தேதி மிக அதிகமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே 9,10 ,11 ஆகிய 3 நாட்களிலும் மிகவும் முக்கியமான நாட்களாக இருக்கிறது.

அதில் 10- ஆம் தேதி மிக அதிக மழை பெய்யும் என்ற எண்ணத்துடன் அரசாங்கம் முழு வீச்சோடு அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் தயாராக இருக்கிறது. சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கின்ற கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், அனைத்து இடங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளார்கள். 10-ஆம் தேதி அதிகமான மழை பெய்தாலும் அதை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |