Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “லத்தி”…. ட்ரைலர் ரிலீஸ் எப்ப தெரியுமா..? வெளியான பட அப்டேட்..!!!

விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.

இத் திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகி வருகின்றது. இத்திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்த நிலையில் சில பிரச்சனைகளால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இத்திரைப்படம் வருகின்ற 22ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |