பாபா திரைப்படம் புது பொலிவுடன் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை.
இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் பொலிவுடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதிதாக மறு தொகுப்பு செய்யப்பட்டிருக்கின்றது. படத்தில் டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு இன்று மறு வெளியீடு செய்திருக்கின்றார்கள். சென்னையில் கொட்டும் மழையிலும் ரசிகர்கள் அதிகாலை காட்சியில் நடனமாடி படத்தை கொண்டாட்டத்துடன் கண்டு ரசித்தார்கள்.
#BaBaReRelease off to a festival start..#Thalaivar Power.. 🔥 https://t.co/hHvLcQkrep
— Ramesh Bala (@rameshlaus) December 10, 2022