Categories
சினிமா தமிழ் சினிமா

BB-6 PROMO1: அப்பாடா, பிக்பாஸ் நிறுத்தல.! வெளியான இன்றைய முதல் ப்ரோமோ..!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸில் தினமும் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகும். ஆனால் அது மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலை வர வேண்டிய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை. மேலும் 12 மணிக்கு வெளியாகும் இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகவில்லை. இதனால் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்களா..? நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ஒரு நாளும் இது போல நடந்தது இல்லை. இன்று மட்டும் ஏன் இப்படி? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் முதல் ப்ரோமோ தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கமல் மட்டுமே இருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, இவங்க எத்தனை வேஷம் போட்டாலும் நல்ல மழை பெய்யும் போது உண்மை முகம் தெரிய ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதுக்கு இன்னொரு வேஷம் போட்டு விடுகிறார்கள். எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை பிதுக்கிக்கிட்டு வெளியே வரத்தான் செய்யுது. இவங்களுக்கு இவங்கள தான் பிடிக்கும். இவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க என்ற அந்த சார்பு வெளிபட்டுகிட்டே வருகிறது. இந்த முறை நடக்க போகும் இரண்டு எவிக்ஷன்ல இந்த ஈகுவேஷன் இந்த டைமிங் எப்படி மாறுகின்றது என பார்ப்போம் என கூறுகின்றார். ப்ரோமோவை பார்த்த பார்வையாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படவில்லை என மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Categories

Tech |