விளாத்திகுளம் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி செய்யும் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளத்தில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி அமைக்கப்பட்டு பயிர் சாகுபடி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றது.
இந்த நிலையில் தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பண்ணை, குட்டைகள், ஆழ்துளை கிணறு ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயிர் சாகுபடியின் பரப்பளவை அதிகரிப்பது பற்றியும் வேளாண் துறை திட்டங்களின் பயன்பாடுகள் மற்றும் அதன் நன்மை-தீமைகள் பற்றியும் விவசாயிகளுடன் உரையாடினார்.