Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்… பிக்பாஸால் சர்ச்சை… விளாசும் நெட்டிசன்ஸ்..!!!!

பிக்பாஸை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள்.

பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எபிக்ஷன் இருக்கின்றது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிஷா, ராம், ஜனனி, அசீம், கதிர், ஏ.டி.கே உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். எப்போதும் வீட்டில் இருந்து யார் வெளியேற போகின்றார் என்பதை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்கள். ஆனால் இந்த வாரம் சனிக்கிழமை எழுமினேட் செய்யப்படும் இரண்டு நபர்கள் யார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்கள் ராம் மற்றும் ஆயிஷா. பிக்பாஸ் ரசிகர்கள் ராமின் எலிமினேஷனை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அவர் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் ஆயிஷா அண்மையில் நடந்த எபிசோடுகளில் நன்றாக விளையாடுகிறார். ஆயிஷாவை விட ஜனனி குறைவான பர்பாமென்ஸ் செய்த நிலையில் அவர் காப்பாற்றப்பட்டிருக்கின்றார். இது மக்களின் தீர்ப்பு கிடையாது. பிக்பாஸ் எடுத்த தன்னிச்சையான முடிவு என நெட்டிசன்கள் பிக்பாஸையும் கமல்ஹாசனையும் விளாசி வருகின்றார்கள்.

Categories

Tech |