பிக்பாஸ் ரன்னர்-வின்னர் குறித்து வனிதா பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இது ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் வனிதா பிக்பாஸ் குறித்து பேசி இருக்கின்றார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகின்றார். டாஸ்குகளை பொருத்தவரை அசீம் சிறப்பாக விளையாடுகின்றார். ஆகையால் அவர் இரண்டாவது இடம் கூட வரட்டும். ஆனால் வின்னராக சிவின் தான் வர வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.